Thursday, May 6, 2010

இறந்தவர்களில் செல்பேசி எண்..

இறந்தவர்களில் செல்பேசி எண்...

ஒரு நொடிப்பொழுதில்
வந்த அந்த அழைப்பு
ஒரு இரங்கல் செய்தி தாங்கி வந்தது...

இறந்தது போன அவருக்கான
வருத்தங்களோடு
கடந்து போகின்றன சில நாட்கள்...

அவரின் நினைவுகள்
அகன்று விட்டன..

மாதம் பல ஆகியும்
இறந்தவரின் பெயரும்
செல்பேசி எண்ணும்
அழிபடாமலே என்னுடன் உள்ளன..

ஒரு நாள் கனவில்
நான் அவரின் எண்ணிற்க்கு
அழைக்கிறேன்..

அவரோ சடலமாக
என் அழைப்பை பார்த்திருக்கும்
வேளையில் வந்தது விழிப்பு..

மற்றுமொரு பரபரப்பான நாளில்..
ஒரு நொடிப்பொழுதில்
வந்த அந்த அழைப்பு

இறந்தவரின் பெயர் தாங்கி..


நான் அழைப்பை ஏற்க்கவில்லை...


கார்த்தி...

No comments:

Post a Comment