Tuesday, January 12, 2010

என் தமிழ் வாழ்த்து….

எல்லோருக்கும் எல்லாம் அளித்த என் தமிழுக்கும், தமிழருக்கும் என் இதயம் கனிந்த

  • · தமிழர் திருநாள்
  • · தை திருநாள்
  • · உழவர் திருநாள்
  • · வள்ளுவர் தினம்
  • · மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

பல பல யுகங்களாய், கல் தோன்றி, மண் தோன்றா காலத்திலே முன் தோன்றியதாக கூறப்படும் என் தமிழுக்கும், என் தமிழை உணர்ந்தோருக்கும், அறிந்தோருக்கும், தமிழருக்கும், மற்றும் யாவரும் கேளிர் என் தமிழ் வாழ்த்து….

அறிவியல் அறிந்தோம்..

அன்பை மறந்தோம்…

மென்பொருள் எழுதினோம்…

தமிழ் எழுத்துகளை மறைத்தோம்…

மேலும் பணம் பெற்றோம்..

ஒழுக்கத்தை இழந்தோம்..

ஆண், பெண் கலந்தோம்

மக்கள் தொகை வளர்த்தோம்…

செல் பேசினோம்..

சொற்க்களை மறந்தோம்..

தொழில் நுட்பங்களை மணந்து

சொந்தங்களை விவாகரித்தோம்..

இலக்கியத்தை மறந்து

இணையத்தில் பறந்தோம்…

கவிதையை மறந்து

கதைகளை அளந்தோம்…

குறுந்தகவலில்

குற்றங்களை மறைத்தோம்..

காலம் உருண்டோடும் ….

கவலை பறந்தோடும் ….

தமிழ் அறியனை ஏறும்…

தமிழ் அறியனை ஏற்றும்…

ஈரம் பிறப்பில்

ஈழம் பிறக்கும்….

எம் தமிழர்தம் நெஞ்சில் ஈரம் பிறந்தால் ….

என்றும் தமிழோடு..

தி.கார்த்தி.

வளத்தூர்.