என்னடா தேசம்...
ஒரு கட்சி, மாற்றம் கொண்டுவரும் என என் முந்தைய தலைமுறை நம்பியகட்சி....
காங்கிரஸ் அரசை தமிழ் மாநில ஆட்சி கட்டிலில் இருந்து விரட்டிய கட்சி...
இந்தி எதிர்ப்பு.... சுயமரியாதை..... இட ஒதுக்கீடு... பெரியாரிஸம்... என ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றத்தை தரும் என எதிர்பார்க்கப்பட்ட கட்சி....
திராவிட முன்னேற்ற கழகம்...
எப்படி தன் தனி தமிழ்நாடு கொள்கையை அண்ணா விட்டு கொடுத்தாரோ, அப்படி தன் திராவிட கொள்கையையே விட்டு கொடுக்க துணிகிறார் இந்த கலைஞர்.
மத்திய அரசுக்கான தேர்தல் முடிந்த பின், ஆட்சி அமைக்கவும், மந்திரி பதவு பேரம் பேசுவதும் புதிதல்ல.
எல்லா கட்சிகளும், எல்லா வியாபாரிகளும் செய்வதுதான்..... லாபம் தானே முக்கியம்... அதில் ஒன்றும் மாற்றம் இல்லை.....
ஆனால் அதை நம் கலைஞர் செய்த விதம், முகம் சுளிக்க வைப்பவை....
யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வேண்டும் என நம் தானை தலைவர் கேட்கிறார் தெரியுமா.
மகன், மகள், பேரன் (நல்ல வேலை மற்ற உறவுகள் மத்திய அமைச்சராக ஆர்வம் காட்டவில்லை), பாலு, ராசா...
இதைல் மகன், மகள், பேரனுக்கு கேட்பது ஊரரிந்த உண்மை, ஒரு ராஜா தன் வாரிசுக்கு பதவி வாங்கி தர நினைப்பது இயல்பு...
ஆனால் இந்த பாலுவும், ராசாவும், முந்தைய ஆட்சியில் இலஞ்ச குற்றச்சாட்டிலும், அதிகார துஷ்பரயோகத்திலும் மாட்டி கொண்டவர்கள். மன்மோகனாலும் நிராகரிக்கபடுபவர்கள்...
இவர்களுக்கு தானை தலைவர், வக்காலத்து வாங்குவது, இவர்கள் தி.மு.க வின் உண்மை தொண்டர்கள் என்பதனால் அல்ல....
இவர்களிடம் மறந்திருக்கும், இலஞ்ச பணமும், இரகசியங்களும்....
பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, உளியின் ஓசைக்கு வசனம் எழுதுவது போல பிரதமருக்கு தந்தி அனுப்பிய நம் திராவிட விடியல் இன்று தன் உறவுக்கும், கள்ள உறவின் உறவுக்கும், தன் குடும்ப பினாமிக்கும் பதவி வாங்க தில்லிக்கு பயணம்....
நீங்கள் இரு நூறு ரூபாய் கொடுத்தால் நாங்கள் அடுத்த தேர்தலிலும் விலை போய்விடுவோம்...
அதிகம் பணம் கொடுத்தவர்கள் வெல்வார்கள்.
ஆனால் விலை போவது நாங்கள் அல்ல வரலாறு...
நாளை வரலாறு உங்களை கல்லகுடி இரயில் வீரன் என்றோ, மிசா தியாகி என்றோ, தமிழின தலைவர் என்றோ, முத்தமிழ் அறிஞர் என்றோ பதிவு செய்யாது.......
உங்கள் மிக சமீபத்திய செயல்பாடுகள் (2000ம் ஆண்டுக்கு பிறகு), உங்களை, சந்தர்ப்பவாதியாக, பச்சோந்தியாக, தமிழின துரோகியாக, குடுப்பம் மிரட்டலில் சிக்குண்ட அடிமையாகவே காலம் உங்களை பதிவு செய்யும்.......
உங்களுக்கு ஏன் நாளைய வரலாறு பற்றிய கவலை என கேட்பீர்கள்....
ஒன்றை மறந்து விடாதீர்கள், நாளைய வரலாறு பற்றிய கவலை உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் திருக்குவளையில் இருந்து இரயில் ஏறி சென்னை வந்திருக்க மாட்டீர்கள்....
இவை உங்களுக்கு குற்றமாக படாமல் இருக்கலாம்.....
யார் சொன்னால் உங்களின் குற்றங்களை ஒத்துக்கொள்வீர்கள்....
உங்கள் மனசாட்சியோ, உங்கள் மஞ்சள் பகுத்தறிவிற்க்கு அப்பாற்பட்ட பெரியார், அண்ணா, ஆன்மாக்களோ உங்களுக்கு சொல்லாது...
நாளைய வரலாறு சொல்லும்.....
உங்கள் நண்பர் எம்.ஜி.ஆருக்கு குடும்ப நெருக்குதல் இல்லாததை நினைத்து நீங்கள் பொறாமைபடும் நாட்கள் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டது....
கலைஞரே......
உங்களை காட்டிலும், அறிவிலும், எழுத்திலும், பண்பிலும், அனைத்திலும் சிறிய
கார்த்தி